இலங்கையில் பிரிட்டன் பிரஜை அதிர்ச்சியில் மரணம்
இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
இன்று (29) முற்பகல் புத்தளம் – குருநாகல் வீதியில் கெப் வண்டியில் சென்ற பிரித்தானிய பிரஜையின் வாகனம் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த நபரை கெப்பிலிருந்து இறக்கிப் பார்த்த பிரித்தானிய பிரஜை அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
தனது வாகனம் மோதி ஒருவர் பாதிக்கப்பட்டமை உணர்ந்த பிரித்தானிய பிரஜைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் பிரித்தானிய பிரஜையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் பிரித்தானிய பிரஜை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய குறித்த நபர் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.
இலங்கையில் பிரிட்டன் பிரஜை அதிர்ச்சியில் மரணம்
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:

No comments:
Post a Comment