விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம்; மகளை கொலை செய்த பெற்றோர்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றிய 26 வயதான பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.
விருப்பத்திற்கு மாறாக தமது மகள் காதல் திருமணம் செய்தமையினால், இந்த கௌரவ கொலை இடம்பெற்றதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மகள் திருமணம் செய்த இளைஞன் தமது சமூகத்திற்கு பொருத்தமற்றவர் எனக் கருதிய பெற்றோர், மகளை கொலைசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஆயினும், அந்தப் பெண்ணின் பெற்றோர் வேறெந்த தகவல்களையும் தெரிவிக்க மறுத்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஆந்திர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம்; மகளை கொலை செய்த பெற்றோர்
Reviewed by NEWMANNAR
on
March 25, 2014
Rating:

No comments:
Post a Comment