உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 7 வயது சிறுவன் பலி
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொடுவாமடுவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரத்தில் சிக்குண்டு ரகுகரன் விதுர்ஷன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடுவாமடுவில் உள் வீதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தப்பகுதியால் வேகமாக வந்த உழவு இயந்திரம், சிறுவன் மீது ஏறிச் சென்றதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக கிராம சேவையாளர் எஸ். கோகுலராஜ் தெரிவித்தார்.
உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 7 வயது சிறுவன் பலி
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment