கொழுத்த சம்பளத்திற்கும் ஏசி பிக்கப்புக்கும் ஆசைப்பட்டவர் அல்ல எமது முதல்வர்... புதியவன் பத்திரிகையை எச்சரிக்கின்றார். பா.டெனிஸ்வரன்.
மன்னாரில் புதிதாக ஆரம்பித்திருக்கும் புதியவன் பத்திரிகையினால் தமிழ் பேசும் சமூகம்
விசனமடைகின்றது.
மன்னாரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர் மன்னார் மாவட்டத்தின் பிரச்சனைகளை வெளிக்கொணர்வேன் என்ற போர்வையில் பத்திரிகைத் தர்மத்துக்கும் அப்பால் பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சரையும் , அமைச்சர்களையும் , மாகாண சபை உறுப்பினர்களையும் விமர்சனம் செய்வதும் , அரசாங்க அதிகாரிகளை அநாகரிகமான முறையில் எழுதுவதும் , மன்னார் நகர சபையை கீழ்த்தரமாக சித்தரிப்பதாலும் மன்னார் தமிழ் பேசும் சமூகம் புதியவன் மீது ஆத்திரமடைந்துள்ளனர் .
கடந்த 23-02-2014 ஆம் திகதிய புதியவன் பத்திரிகையில் வட மாகாண முதலமைச்சரை " 60 வது வயதோடு வீட்டிற்க்கு போகாமல் பொல்லுப் பிடித்துக்கொண்டுஏசி பிக்கப் வேணும் கொழுத்த சம்பளம் வேணும் என்று அலையுறாராம் " என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது . தமிழ் புத்திஜீவிகள் , ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தினதும் ஏகோபித்த தெரிவே எமது முதலமைச்சர் . அவரின் இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அது ஜெனீவா வரை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது .
மேலும் இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களுக்குள்ளும் எமது மாகாண முதலமைச்சரேதலைசிறந்தவரும் புத்தி சாதூர்யமும் நேர்மையுடையவரும் என்று சர்வதேசமே பாராட்டும் அளவுக்கு தலை நிமிர்ந்துநிற்கும் ஒரு முதல்வர் ஆவார் . இவரின் தரத்தைப் பற்றி எழுதுவதற்கே ஒரு தராதரம் வேண்டும் . எனவே இச்செய்தியினை வட மாகாண போக்குவரத்து அமைச்சர் கண்டிக்கின்றார் .
பத்திரிகைத் தர்மம் என்பது என்ன ? எத்தனை பத்திரிகைகள் நல்ல செய்திகளை வெளியிட்டும் , சுட்டிக் காட்டவேண்டியவைகளை சுட்டிக் காட்டியும் வெற்றியும் பெற்றுள்ளது . சில ஊடகவியலாளர்கள் பத்திரிக்கை தர்மத்திற்காகதமது உயிர்களை விதைத்த வரலாறுகளும் உண்டு . சில பத்திரிகையாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அவற்றின் தொழில் தர்மத்தை பாராட்டி விருதுகளும் கிடைத்திருக்கின்றன .
ஆனால் புதியவன் ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறை கூறுவதும் , முதலமைச்சரைக் கிண்டல்அடிப்பதும் , அநாகரிகமான முறையில் எழுதுவதையுமே தொழிலாகக் கொண்டுள்ளது . தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களும் , பாராளுமன்ற உறுப்பினர்களும் , வட மாகாண முதலமைச்சரும் , அமைச்சர்களும் , மாகாணசபை உறுப்பினர்களும் , தமிழ்த் தேசிய வாதிகளும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்று எடுப்பதற்காகபல்வேறு பட்ட வழிகளில் இராஜதந்திர ரீதியாக சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளை ஏற்ப்படுத்திபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கும் போது 20-02-2014 ஆம் திகதிய புதியவன் பத்திரிகையில் " அரசியல்அனுபவமும் தமிழ்த் தேசியப் பார்வையும் இல்லாத முதல்வரும் நான்கு அமைச்சர்களும் விழாக்களுக்குச் சென்றுமாலை பெறுவதும் ஊடகவியலாளர்களை பிடித்து பக்கம் பக்கமாக தங்கள் வாத பிரதி வாதங்களை அளப்பதிலுமேகாலம் கரைகின்றது " என்று விமர்சிக்கப்பட்டுள்ளது .
வட மாகாணத்துக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத போதும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை மக்கள் அறிந்தவை . இவை தொடர்பாக பல்வேறு பத்திரிகைகளில்செய்திகள் வெளிவரும் போது அவற்றினை அறியாதவன் போன்று புதியவன் சூடுபறக்கும் செய்திகளை சுவாரசியமாகசொல்ல வேண்டும் , பத்திரிகையை விற்க வேண்டுமென்று தவறான செய்திகளை வெளியிடுவதை அவர் வன்மையாககண்டிப்பதுடன் மக்களுக்குத் தேவையான செய்திகளை உள்ளதை உள்ளபடி நடு நிலைமையாக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார் .
சர்வதேச சமூகத்தின் ஏகோபித்த தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த அரசியல் வாதிகள் . இவ்வாறிருக்கதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களையும் , அமைச்சர்களையும் விமர்சனம் செய்வதும் , சம்பளத்துக்காக அலைபவர்கள் என்று விமர்சிப்பதும் தனக்குத் தானே மண்ணை வாரும் செயலாகும் . எந்தவொருசந்தர்ப்பத்திலும் எமது மக்களை ஏமாளிகள் என்றோ அல்லது புத்தி சாதூர்யம் அற்றவர்கள் என்றோ நினைப்பதுபொருத்தமானதல்ல ஏனென்றால் ஏற்கனவே மக்கள் புத்திசாலிகள் என்பதை பல தடவைகள் நிரூபித்துக்காட்டியுள்ளார்கள் .
ஒரு பத்திரிகையையோ அதன் செய்திகளையோ விமர்சிப்பதற்கு எந்தவொரு தகுதியும் தேவையில்லை , ஆனால் ஒருபத்திரிகையை நடாத்துவதற்கு தகுதி ஒன்று அவசியமானது , தேசியத்துக்காக குரல் கொடுத்தவன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்பவர் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து செல்லும் போது மனிதாபிமான அரசசார்பற்ற நிறுவனத்தின் வாகனத்தில் தப்பி ஓடிவந்து மன்னாரில் மத நிறுவனமொன்றில் தஞ்சம் புகுந்தவரும் , தனதுகிராமத்தில் சாதி குறைந்தவர்கள் என மற்றவர்களுக்கு குடி தண்ணீர் கூட கொடுக்காதவர் எவ்வாறு பத்திரிக்கை தர்மம்பற்றி பேசுவது . தேசியம் என்று கூறிக்கொண்டு சூடு பறந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் மக்கள் தன்னைஆதரிக்கவில்லை என்றும் , தோல்வியின் நரைகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேன்மை தங்கியஅறிவியலாளர்களையும் சட்ட வாதிகளையும் விமர்சனம் செய்வதால் எந்தப் பயனுமில்லை .
எந்தவொரு மனிதனும் பட்டதாரியாகவோ , அரசியல் வாதிகளாகவோ பிறப்பதில்லை அவரவரது நடத்தைகளும் , பண்பாடுகளும் , மக்களோடு பழகும் விதங்களும் சுய புத்தியுமே அவரவரை உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும்ஆக்குவது . இது தவிர வீணான விமர்சனம் செய்வது தனக்குத் தெரியாத விடயம் தன் பிடரிக்குச் சேதம் என்பது போலஆகிவிடும் என்றும் தெரிவித்தார் ...
எனவே எதிர்காலத்தில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ , முதலமைச்சரையோ தரக்குறைவாகவோ அல்லது உண்மைக்கு புறம்பாகவோ பத்திரிகைத் தொழில் தர்மதையோ மீறி செய்திகள் வெளிவரும் பட்ச்சத்தில்அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார் எனவும் தெரிவித்தார் .
கொழுத்த சம்பளத்திற்கும் ஏசி பிக்கப்புக்கும் ஆசைப்பட்டவர் அல்ல எமது முதல்வர்... புதியவன் பத்திரிகையை எச்சரிக்கின்றார். பா.டெனிஸ்வரன்.
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:


No comments:
Post a Comment