அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதியுதவியில் கீரிமலை சிவ பூமியில் யாத்திரிகர் விடுதி.
இந்து சமய நலன் விரும்பிகளின் நிதியுதவிக்குட்பட்ட அகில இலங்கை இந்து மாமன்றத்தின்
நிதியுதவியினாலும் பெருமுயற்சியினாலும் கீரிமலை சிவ பூமியில் யாத்திரிகர் விடுதி உட்பட இரு மாடிகளைக் கொண்ட மடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் மேல்மாடி முழுவதற்குமான நிதி பங்களிப்பை இறைசிரோரத்தினம் மனிதநேயமாமணி வி. கயிலாசப்பிள்ளை மற்றும் திருமதி அபிராமி கயிலாசப்பிள்ளை குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
கீழ்மாடியிலுள்ள அறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நலன்விரும்பிகளால் நிறைவேற்றப்பட்டு மிகுதி நிதிப்பங்களிப்பு அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டும் உள்ள இக்கட்டிடத்தின் திறப்புவிழா எதிர்வரும் 30ஆம் திகதி அன்று காலை 9.30 மணியளவில் நடைபெறும்.
அன்பர்கள் அடியார்கள் யாவரையும் இவ்வைப வத்தில் கலந்துகொள்ளும் படி அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகின்றது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதியுதவியில் கீரிமலை சிவ பூமியில் யாத்திரிகர் விடுதி.
Reviewed by NEWMANNAR
on
March 30, 2014
Rating:

No comments:
Post a Comment