அண்மைய செய்திகள்

recent
-

சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கட்டமொன்றில் தமிழக முதல்வர் இதனைக் குறிப்பிட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தென் கிழக்கு கடல் பகுதியான ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலுள்ள மணல் பாறை பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டருந்தன.

இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதன் காரணமாக சேது சமுத்திரத் திட்டம் நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டால் மீவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இலங்கை மற்றும் இந்திய கடற்கரை சுற்றுசூழலும் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், இந்த காரணங்களால் சேது சமுத்திரத் திட்டம் அநாவசியமானது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என  ஜெயலலிதா மேலும் தெரிவித்துள்ளார்.


சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு Reviewed by NEWMANNAR on March 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.