மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு!
காணாமல் போன எம்.எச்.370 விமானத்தின் பாகம் ஒன்று இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நியுசிலாந்தின் விமானம் ஒன்று இதனை கண்டுபிடித்த நிலையில், ஐந்து விமானங்கள் இதனை உறுதிப்படுத்தி இருப்பதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதனை மீட்டு சோதனைக்கு உட்படுத்துவதற்காக கப்பல் ஒன்று குறித்த பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இன்றைய தினம் அதனை மீட்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் தேடுதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து மாற்றுப் பகுதி ஒன்றிலேயே நேற்றையதினம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த பாகத்தை அடையாளப்படுத்த கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு!
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:


No comments:
Post a Comment