நாட்டில் சிவில் குற்றச் செயல்கள் உயர்வு: பாலியல் துஸ்பிரயோகம் அதிகளவில் பதிவு
நாட்டில் சிவில் குற்றச் செயல்களில் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சிவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை வெளிச்சமிடப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
போர்க் காலத்துடன் ஒப்பீடு செய்யும் போது சிவில் வன்முறைகள் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் அதிகரிக்கப்பட்டமை பதிவாகியுள்ளது.
சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் பதிவாகத் தொடங்கியுள்ளன.
2011ம் ஆண்டில் மொத்த வன்முறைச் சம்பவங்களில் 60 வீதமானவை விட்டு முறைகளாக காணப்பட்டன. இந்த எண்ணிக்கை 2013ம் ஆண்டில் 80 வீதமாக உயர்வடைந்துள்ளது.
சனத்தொகை அதிகரிப்பு, நாகரீக மோகம், ஆயுத பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளினால் அதிகளவில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன.
பணவீக்கம் நாட்டின் குற்றச் செயல்கள் உயர்விற்கு முக்கியமான காரணியாக அமைந்துள்ளது.
பொருளாதார சுபீட்சமிக்க, நோர்வே போன்ற ஸ்கென்டினேவிய நாடுகளில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதனால் கடுமையான தண்டனை விதிப்பதன் மூலம் குற்றவாளிகளை எச்சரிக்க முடியும் என ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சிவில் குற்றச் செயல்கள் உயர்வு: பாலியல் துஸ்பிரயோகம் அதிகளவில் பதிவு
Reviewed by NEWMANNAR
on
April 05, 2014
Rating:

No comments:
Post a Comment