அண்மைய செய்திகள்

recent
-

சிலாவத்துறை பாடசாலை விளையாட்டு மைதான புனர்நிர்மாண பணிக்கு சமுக ஆர்வலர் முனாஸ் அரபத் நிதி உதவி

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறையினை பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது நியூசிலாந்தில் வசித்து வரும் முனாஸ் அரபாத்என்ற சமுக ஆர்வலர் கடந்த மாதம் சிலாவத்துறை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பினை ஏற்று 2014 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியினை பார்வையிட வந்த வேளையில் சிலாவத்துறை பாடசாலை விளையாட்டு மைதானத்தின் நிலையினை பார்த்த வேளை  கவலை அடைகின்றேன். என்றும் பாடசாலை மைதானத்தினை என்னுடைய சொந்த நீதியில் புனர்நிர்மாணம் செய்து தருவேண் என்று தெரிவித்தார். 

அதன் முதல் கட்டமாக நேற்று (03-04-2014) ஜீம்மா தொழுகையின் பின்பு சிலாவத்துறை பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக வேலை திட்டதிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றன. 

நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரி வருகை தந்தார் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர் இதே போன்று பல  இவர் உதவிகளை பொது மக்களுக்கு செய்து வருகின்ற சமுக ஆர்வரலர் என்பது குறிப்பிடதக்கது. 






எஸ்.எச்.எம்.வாஜித்
சிலாவத்துறை பாடசாலை விளையாட்டு மைதான புனர்நிர்மாண பணிக்கு சமுக ஆர்வலர் முனாஸ் அரபத் நிதி உதவி Reviewed by NEWMANNAR on April 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.