நம்பிக்கையூட்டும் வண்ணம் நடைபெற்ற இனிய வாழ்வு இல்ல விளையாட்டுப் போட்டி
வாழ்வின் பல்வேறு காரணங்களால் சூழல்களால் உடல் உள பாதிப்புக்கு உள்ளான உறவுகளை மேம்படுத்தும் முகமாக நீண்டகாலமாக இயங்கிவரும் இனியவாழ்வு இல்லம் தனது இல்ல மெய்வல்லுநர் போட்டியை நடாத்தியுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக இந்த இல்லத்தின் ஆளுநர் சபைத் தலைவரும் முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டாக்டர். வில்லியம் ஜெயகுலராஜா கலந்துகொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரதாபன், ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் நாகரட்ணம், விசேட கல்வி ஆலோசகர் மகேஸ்வரி, மாவட்ட சமுகசேவைகள் உத்தியோகத்தர் தசரதராஜகுமாரன், மாவட்ட கணக்காளர் மிக்கேற்பிள்ளை இயேசு றெஜினோல்ட், வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலய அதிபர் இரட்ணம் பேரின்பராணி, உடையார்கட்டு வித்தியாலய வீ.சிறீகரன் குரவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மேகநாதன் ஆகியோரும்,
சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை அதிபர் இராஜேந்திரம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
வாழ்வின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மனத்திறன் வெளிப்படும் வகையில் மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர்.
நம்பிக்கையூட்டும் வண்ணம் நடைபெற்ற இனிய வாழ்வு இல்ல விளையாட்டுப் போட்டி
Reviewed by NEWMANNAR
on
April 12, 2014
Rating:

No comments:
Post a Comment