சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
யாழ் ஊடகவியலாளர்களுக்கும் யாழ் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனா இந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
சுழிபுரம் மேற்கில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து 24 வயது நிரம்பிய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதுடன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது
Reviewed by NEWMANNAR
on
April 12, 2014
Rating:

No comments:
Post a Comment