மன்னார் சிவபூமி இந்துக்குருமார் பேரவையின் ஆசியும் வாழ்த்துக்களும்
ஜய வருஷப் பிறப்பு
மெய் அடியார்களே,
சர்வமங்களகரமான ஜய வருஷம் 14.04.2014 ஆம் திகதி திங்கட்கிழமை சரியாக காலை 06 மணி 11 நிமிடத்திற்க்கு சதுர்த்தசி திதியுடன் கூடிய அத்த நட்சத்திர வணிச கரணத்தில் எருமைக்கடா வாகணத்தில் வாக்கிய பஞ்சாங்கப்படி பிறக்கின்றது.
விஷூ புண்ணிய காலம்
14.04.2014 ஆம் திகதி அதிகாலை 02.11 தொடக்கம் காலை 10.11 வரை.
இந்நேரத்தில் காலில் விளா இலையும் சிரசில் ஆலமிலையும் வைத்து மருத்துநீர் அனிதல் வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள்
¬
ரோகிணி, உத்தரம் 2,3,4 பாதம், அத்தம், சித்திரை 1,2 பாதம், திருவோணம், அவிட்டம் 3,4 பாதம் சதயம், பூரட்டாதி 1,2.3 பாதம். இவர்கள் கட்டாயம் மருத்துநீர் அணிதல் வேண்டும்.
நிறம்
சிவப்பு, வெண்மை நிறமுடைய பட்டாடை அனிதல் சிறந்தது.
ஜய வருஷ பொதுப்பலன்
கடும் வெப்பம், பின்பகுதி அதிக மழை, எரிபொருள் விலை ஏற்றம், மருந்து வகைகள் குறைவு, குழப்பங்கள், பெண்களுக்கு நன்மை.
ஆதாய விபரம்
அதிகலாபம் - இடபம், துலாம்.
லாபம் - சிங்கம், தனு, மீனம்.
சமசுகம் - மிதுனம், கன்னி, மகரம், கும்பம்.
நஷ்டம் - மேடம், கடகம், விருட்சிகம்.
வியாழ மாற்றம்
13.06.2014 ஆம் திகதி சரியாக மாலை 05.39 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிற்க்கு மாற்றம் பெறுகிறார். இதனால் கடகம் தனுசு துலாம் சிங்கம் ஆகிய ராசிக்காரர் வியாழ வழிபாடு செய்வது சிறந்தது.
சனி மாற்றம்
15.12.2014 ஆம் திகதி துலாம் ராசியில் இருந்து விருட்சிக ராசிக்கு சனி பகவான் மாற்றம்; பெறுகிறார். இதனால் மேடம் துலாம் விருட்சிகம் தனுசு ஆகிய ராசிக்காரர் சனி வழிபாடு செய்வது சிறந்தது.
கை விசேடம்
14.04.2014 திங்கட்கிழமை – காலை 06.11 – 07.31 , காலை 10.04 – 12.03, மாலை 02.22 – 4.27
மாலை 06.21 – 07.21, மாலை 09.15 – 10.23
16.04.2014 புதன்;கிழமை – காலை 06.04 – 07.41 , காலை 07.49 – 09.44, மாலை 02.14 – 4.02
மாலை 06.13 – 08.00 மாலை 08.17 – 10.11
'சர்வே ஜனகா சுகினோ பவந்து சமஸ்ததன் மங்களானி பவந்து'
இந்துக்குருமார் பேரவை
மன்னார்.
மன்னார் சிவபூமி இந்துக்குருமார் பேரவையின் ஆசியும் வாழ்த்துக்களும்
Reviewed by NEWMANNAR
on
April 13, 2014
Rating:

No comments:
Post a Comment