அண்ணனின் காலை வெட்டித் துண்டாக்கிய தம்பி கைது! போதையில் விபரீதம்
இலங்கையின் பொகவந்தலாவை, லெச்சுமி தோட்டம் மேற்பிரிவு தோட்டத்தில் சகோதரர்களுக்கிடயில் ஏற்பட்ட கைகலப்பில் அண்ணனின் காலை அவரது தம்பி வெட்டி துண்டாக்கிய சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
மது போதையில் இருந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்தே இந்த சம்பவம் ஏற்படடுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பட்ட நிலையில் அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அண்ணனின் காலை வெட்டித் துண்டாக்கிய தம்பி கைது! போதையில் விபரீதம்
Reviewed by NEWMANNAR
on
April 13, 2014
Rating:

No comments:
Post a Comment