விமானத்தினை தேடும் முயற்சி கடலுக்கடியில் தொடங்கியது
காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சி இன்று இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் ஆரம்பமாகியுள்ளது.
விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வெளியாகும் சமிக்கையை கேட்டு அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் கருவிகளை கப்பல்கள் இழுத்துச் செல்கின்றன
இரண்டு கப்பல்கள் இந்த இழுவைக் கருவிகளுடன் கடலுக்கடியில் சுமார் 240 கிமீ நீளமுள்ள பாதையில் இந்த கறுப்புப் பெட்டி விழுந்திருக்கக் கூடிய இடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியக் கடற்படை கப்பலான, ‘ஓஷன் ஷீல்ட்’ என்ற கப்பலும் எச்.எம்.எஸ் எக்கோ என்ற கப்பலும் கடலுக்கடியில் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கின்றன.
கறுப்புப் பெட்டியின் மின்கலம் 30 நாட்களுக்கு மட்டுமே இயங்கக்கூடியது . இந்த 30 நாள் காலக்கெடு நெருங்குவதால் இதைத் தேட இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருக்கின்றன.
தேடல் முயற்சி நடக்கும் இந்தப் பகுதி சுமார் 2.17 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அவுஸ்திரேலிய நகரான பெர்த்துக்கு சுமார் 1,700 கிமீ வட மேற்கே இந்தப் பகுதி அமைந்திருக்கிறது.
விமானத்தினை தேடும் முயற்சி கடலுக்கடியில் தொடங்கியது
 Reviewed by NEWMANNAR
        on 
        
April 05, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 05, 2014
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
April 05, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 05, 2014
 
        Rating: 

 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment