வடபகுதி ஊடகவியலாளர்களுக்குப் புலனாய்வுச் செய்தி சேகரிப்பை ஊக்குவிக்க பயிற்சிகள் விரைவில்.
வடபகுதி ஊடகவியலாளர்களுக்குப் புலனாய்வுச் செய்தி சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள் நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என ஸ்ரீலங்கா டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் பணிப்பாளர் எஸ்.அனுகே தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை குறித்த அமைப்பினர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தென்னிலங்கையிலுள்ள செய்தியாளர்களுடன் ஒப்பிடும்போது புலனாய்வுச் செய்தியில் வடபகுதி ஊடகவியலாளர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை. இதற்குக் காரணம் இங்கு இடம்பெற்ற யுத்தமாகவும் இருக்கலாம்.
இனிவரும் காலங்களிலாவது புலனாய்வுச் செய்தியினை அரசியல் வேறுபாடின்றி சகல தரப்புடனும் இணைந்து சகல விடயங்களிலும் முன்னெடுத்து புலனாய்வுச் செய்தியை அறிக்கையிட வேண்டும்.
இதற்காக வட பகுதி ஊடகவியலாளர்களுக்கான ஒரு தனியான பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஊடக வியலாளர்கள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. மாறாக குறித்த நிறுவனம் ஊக்குவிப்பை வழங்கும் என்றார்.
வடபகுதி ஊடகவியலாளர்களுக்குப் புலனாய்வுச் செய்தி சேகரிப்பை ஊக்குவிக்க பயிற்சிகள் விரைவில்.
Reviewed by NEWMANNAR
on
April 04, 2014
Rating:

No comments:
Post a Comment