அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

இலங்கை அரசு ஜெனீவா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்திக்கு முகம்கொடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதால் மட்டுமே அபாண்டமான குற்றஞ்சாட்டுபவர்களை மண்ணைக் கவ்வவைக்க முடியும் என அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.



விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் எனக் கூறுவது குற்றம்சாட்டுபவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தக் கூடும்,

வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தைரியமாக எதிர்கொண்டு அந்தக் குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதே சாலச் சிறந்ததாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானமும் நாட்டுக்கு எதிரானது அல்ல, அவை இறுதிகட்ட போரின்போது குற்றமிழைத்ததாகக் கூறப்படும் தனிநபர்களுக்கு எதிரானவையே

நாட்டிலுள்ள அனைவரையும் குற்றவாளிகளாக ஜெனீவா தீர்மானம் காணவில்லை போர் நிறுத்த காலமான 22.2.2002 முதல் போர் முடிவடைந்த 19.5.2009 வரையிலான பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும்

இலங்கை அரசுடன் தமது கட்சிக்கு பல விஷயங்களில் முரண்பாடு இருந்தாலும், ஆட்சியிலிருந்து வெளியே வருவது சரியான நிலைப்பாடு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் Reviewed by NEWMANNAR on April 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.