பாலியாறு மேற்கு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வீதி புனரமைப்புப் பணிகள் விரைவில்
இன்று 04-04-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பாலியாறு மேற்கு கிராம மக்களை வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண விவசாய கால்நடைகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் சந்தித்து உரையாடிய வேளை அவர்களது கிராமத்துக்கு செல்லும் 1.7 ம.அ பிராதன பாதை நீண்டகாலமாக பளுதடைந்திருப்பதையும் அதனால் அவ்வழியாக செல்லும் பொது மக்களும் பாடசாலை மாணவர்களும் மளை காலங்களில் மிகவும் அசௌகரியங்களை சந்திப்பதாகவும் தெரியப்படுத்தினர்.
எனவே பாலியாறு மேற்கு கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதை திருத்த பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர்கள் மக்களுக்கு உறுதி மொழி வழங்கினர் இதனூடாக சுமார் 100 குடும்பங்கள் வரையில் நன்மை அடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
பாலியாறு மேற்கு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வீதி புனரமைப்புப் பணிகள் விரைவில்
Reviewed by NEWMANNAR
on
April 05, 2014
Rating:

No comments:
Post a Comment