சிறுமிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஒருவர் கைது
வவுனியா, காத்தார் சின்னககுளத்தை சேர்ந்த சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமிகள் இருவரும் கடந்த 6 ஆம் திகதி தமது காதலர்கள் என தெரிவிக்கப்படும் இரு இளைஞர்களுடன் சென்றிருந்தபோதே அவர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
செகக்டிப்பிலவு கிராமத்தில், இரு சிறுமிகளும் அவர்களின் காதலர்களான இரு இளைஞர்கள் தனிமையில் இருந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதாக மற்றையவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
சிறுமிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஒருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
April 13, 2014
Rating:

No comments:
Post a Comment