மன்னார்,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் விசேட கருத்தமர்வு.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பான விசேட கருத்தமர்வு நேற்று செவ்வாய்க் கிழமை (17)காலை மன்னார் ஞானோதையத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ் விசேட கருத்தமர்வு சட்ட மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்ப்பாட்டில் இடம் பெற்றது.
இன் நிகழ்விற்கு மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோணி சகாயம் தலைமை தாங்கினார். இவ் நிகழ்வில் சட்ட மற்றும் நம்பிக்கை நிதியத்தின் சார்பாக சட்டத்தரணி எஸ். ஐங்கரன் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்.
இன் நிகழ்விற்கு விசேட அழைப்பின் பேரில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதோடு மக்களுக்கு சில சட்ட நுணுக்கங்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
இதன் போது மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டனர்.
மன்னார்,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் விசேட கருத்தமர்வு.
Reviewed by NEWMANNAR
on
June 18, 2014
Rating:

No comments:
Post a Comment