மன்னார் பஸார் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் துர்நாற்றம்-வர்த்தகர்கள் பாதிப்பு.- படங்கள்
மன்னார் பஸார் பகுதியூடாக கடலுக்குச் செல்லும் கழிவு நீர் வாய்க்காலில் இருந்து தொடர்ந்தும் பாரிய துர்நாற்றம் வீசி வருவதினால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கழிவு நீர் வாய்க்கால் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவே அமைக்கப்பட்டுள்ளது.குறித்த கழிவு நீர் வாய்க்காலிற்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையங்களில் அதிகமான உணவகங்கள் காணப்படுவதினால் உணவகங்களின் உரிமையாளர்களும்,உணவகத்திற்கு வரும் மக்களும் அதிகளவில் பாதீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கழிவு நீர் வாய்க்கால் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளமையினால் கழிவுப்பொருட்கள் தேங்கிய நிலையில் பாரிய துர்நாற்றம் வீசி வருவதாக வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்கள் பாரிய சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உடனடியாக குறித்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய மன்னார் நகர சபை முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் துர்நாற்றம்-வர்த்தகர்கள் பாதிப்பு.- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 18, 2014
Rating:
No comments:
Post a Comment