பெயரில் மாற்றம் : ஜனனி திடீர் முடிவு
சென்டிமென்ட்டாக தனது பெயரில் மாற்றம் செய்து பார்க்கிறார் ஜனனி அய்யர்.பாலாவின் அவன் இவன் படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். தொடர்ந்து சில படங்களில் நடித்தும் பிரபலம் ஆகவில்லை. அந்த படங்களும் ஓடவில்லை. மலையாளத்தில் திடீரென லக் அடிக்க அங்கு சென்று சில படங்களில் நடித்தார். இதற்கிடையில் தெகிடி படத்தில் ஜனனி என்ற பெயரில் நடித்தார்.
படம் ஹிட்டானது. இதனால் சென்டிமென்ட¢டாக இனி ஜனனி என்று மட்டுமே தனது பெயரை பயன்படுத்துமாறு தான் நடிக்கும் பட டைரக்டர்களிடம் சொல்லியிருக்கிறார்.இது குறித்து ஜனனி கூறியது:
வழக்கமாக எனது முழு பெயரையும் போடும்படிதான் டைரக்டர்களிடம் வற்புறுத்துவேன். தெகிடி படத்தில் அப்படி எதுவும் சொல்லவில்லை. அவர்களே ஜனனி அய்யர் என டைட்டில் கார்டில் போடுவார்கள் என நினைத்தேன்.
படம் ரிலீசுக்கு முன்பு பிரிவியூ பார்த்தபோது, எனது பெயரை வெறும் ஜனனி என போட்டிருந்தார்கள். அதிர்ச்சி அடைந்தேன்.ரிலீஸ் நெருங்கியதால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதை பெரிது படுத்த வேண்டாம் என அமைதியாக இருந்துவிட்டேன். பார்த்தால் அந்த படம் ஹிட்டாகி, மேலும் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் இனி ஜனனி என்று மட்டுமே எனது பெயரை பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.
பெயரில் மாற்றம் : ஜனனி திடீர் முடிவு
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:

No comments:
Post a Comment