அண்மைய செய்திகள்

recent
-

400 கோடி ஜீவனாம்சம் கேட்கும் ஹிருத்திக் ரோஷன் மனைவி

திரையுலகத்தினரின் குடும்ப வாழ்க்கையில் சில மண முறிவுகள் எதிர்பாராமல் நடந்து விடுகின்றன. பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி, குழந்தைகள் பெற்ற பின் அந்த நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்து அவர்களது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சமீபகாலத்தில் மலையாளத் திரையுலகில் திலீப் – மஞ்சுவாரியார் விவாகரத்தும், இந்தித் திரையுலகில் ஹிருத்திக் ரோஷன் – சுசானி விவாகரத்தும் அவரவர் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

 அதற்கடுத்து அவர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பற்றிய பேச்சுக்களும், சர்ச்சையும் எழ ஆரம்பித்தன. ஆனால், திலீப் – மஞ்சுவாரியால் இருவரும் அந்த விஷயத்தில் ஒரு உடன்பாடு கண்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதே சமயம், ஹிருத்திக் ரோஷனின் மனைவியான சுசானி அவரது கணவரிடமிருந்து 400 கோடி ரூபாய் சொத்துக்களை ஜீவனாம்சமாகக் கேட்பதாக பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 ஹிருத்திக் ரோஷனுக்கு சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாம். மும்பை, பெங்களூரு, சிங்கப்பூர் உட்பட பல இடங்களில் வீடுகளும் நிலங்களும்அவர்களுக்கு உள்ளதாம். அவற்றில் சிலவற்றை முக்கியமாகக் குறிப்பிட்டு சுசானி கேட்டுள்ளதாகவும் அவற்றைத் தர ஹிருத்திக் சம்மதித்துள்ளதாகவும் பேசிக் கொள்கிறார்கள். திரையுலக நட்சத்திரங்களிடையே இதுதான் மிகவும் காஸ்ட்லியான ஜீவனாம்சமாக அமையப் போகிறது என பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
400 கோடி ஜீவனாம்சம் கேட்கும் ஹிருத்திக் ரோஷன் மனைவி Reviewed by NEWMANNAR on July 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.