அண்மைய செய்திகள்

recent
-

ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்கிறார் குஷ்பு!

அரசியல் கோதாவில் இருந்து விலகி விட்ட குஷ்பு இப்போது சின்னத்திரையில் மட்டும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு ஆகிய படங்களை தயாரித்திருப்பவர், அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்க கல்லெறிந்தார். 

ஆனால், அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால் அந்த முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுவிட்டார். ஆனால், இப்போது ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் குஷ்பு. அப்படி தான் தயாரிக்கும் படத்தை தனது கணவர் சுந்தர்.சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களுக்கும் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போகிறாராம். அதோடு ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன்-ஹன்சிகாவை புக் பண்ணி விட்டவர், மேலும் சில நம்பிக்கைக்குரிய நடிகர்-நடிகைகளுக்கு அழைப்பு விட்டு வருகிறாராம். 

 ஆனால் அப்படி குஷ்பு தயாரிக்கும் அனைத்து படங்களுமே சிறு முதலீட்டு படங்கள்தானாம். குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாம். அதனால் தற்போது வித்தியாசமான கதை தேடலில் ஈடுபட்டுள்ள அவர், ஹிட் கொடுத்து வரும் சில இளவட்ட ஹீரோக்களிடமும் கால்சீட் கேட்டு வருகிறார். இந்த தகவல் பரவியதை அடுத்து கோடம்பாக்கத்தில் ஓரிரு படங்கள் நடித்த பல ஹீரோக்களை குஷ்புவை முற்றுகையிட்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்கிறார் குஷ்பு! Reviewed by NEWMANNAR on July 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.