கொலைக் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை
கொலை சம்பவமொன்றில் குற்றவாளிகளாக காணப்பட்ட நான்கு பேருக்கு கண்டி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த நால்வருக்கே கண்டி மேல் 
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி புசல்லாவை, பலாகொல்ல பகுதியில் ஒருவரைக் கொலைசெய்து வாகனமொன்றை கடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த நால்வருக்கும் எதிராக சட்ட மாஅதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
 இதனையடுத்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளில் நால்வர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதன் பிகாரம், குற்றவாளிகளுக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனையை விதித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த காலப்பகுதியில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொலைக் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 25, 2014
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 25, 2014
 
        Rating: 


No comments:
Post a Comment