சி.வி.விக்னேஸ்வரன் – வட மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடையே சந்திப்பு
வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில்நேற்று சந்திப்பொன்று  இடம்பெற்றது.
இந்த சந்திப்பு யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 
 இதன்போது உள்ளூராட்சி மன்றங்களினால், வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்து செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. 
 இந்த சந்திப்பில் வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைர்கள், உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சி.வி.விக்னேஸ்வரன் – வட மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடையே சந்திப்பு
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 25, 2014
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 25, 2014
 
        Rating: 


No comments:
Post a Comment