அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு-கூட்டம் ஒத்திவைப்பு - படங்கள்

மன்னார் நகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படவில்லை என கோரி மன்னார் நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சபைக்கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தமையினால் மன்னார் நகர சபைக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  

மன்னார் நகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்று(22) செவ்வாய்க்கிழமை சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்றது.இதன் போது உப தலைவர்,நகர சபையின் செயலாளர் உற்பட சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் நகர சபை பொதுக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும் இது வரை சபை குறித்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்ககொடுக்கவில்லை என மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார். 

 இறுதியாக மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் மன்னார் நகர சபைக்கு சொந்தமானதாக காணப்படும் 5 ஏக்கர் காணியினுள் தனி நபர் ஒருவர் உட் சென்று துப்பரவு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த காணி நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

எனினும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்களுக்கு என்ன பதிலை கூற முடியும் எனவே நான் இந்த சபைக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் சபைக்கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து நகர சபை உறுப்பினர்களான இரட்ணசிங்கம் குமரேஸ் மற்றும் எஸ்.டிலான் ஆகியோரும் சபைக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இதனால் சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.







மன்னார் நகர சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு-கூட்டம் ஒத்திவைப்பு - படங்கள் Reviewed by NEWMANNAR on July 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.