அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இடம் பெற்ற பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான விஷேட செயலமர்வு-படங்கள்

முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள வக்ஃபு சபை பிரிவால் நேற்று (21.07.2014) வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பள்ளி நிர்வாகிகளுக்குமான விஷேட செயலமர்வு ஒன்று வவுனியா நகர பள்ளிவாசலில் இடம்பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி செயலமர்வில் பின்வரும் விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.


 இஸ்லாமிய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள வக்ஃபு சபையில் பள்ளிவாசல்களை பதிவு செய்வது தொடர்பாகவும், இஸ்லாமிய அடிப்படையில் நிர்வாகிகளின் தன்மைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டிய தகைமைகள் தொடர்பாகவும், வக்ஃபு சபையின் சட்டதிட்டங்கள் தொடர்பாகவும், ஹராம், ஹலால் சம்மந்தமாகவும், வவுனியா மாவட்ட சகல பள்ளி நிர்வாகிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. 

 இதன் போது இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் நோன்பு திறப்பதற்கான பேரீத்தம் பழங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களால் அக்கிராம பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மாபெரும் இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





வவுனியாவில் இடம் பெற்ற பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான விஷேட செயலமர்வு-படங்கள் Reviewed by NEWMANNAR on July 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.