ஓமந்தையில் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
வட மாகாண ஊடகவியலாளர்கள் சிலர் ஓமந்தை பொலிஸாரால் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தி சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் ஆரம்பமான இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் வட மாகாண ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் வட மாகாணம் மற்றும் தென் பகுதி ஊடகவியலாளர்கள் பங்கேற்றதாக எமது செய்தியாளர் கூறினார்.
சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட 5 ஊடக அமைப்புகள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இதேவேளை குறித்த கவனயீர்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஓமந்தையில் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:

No comments:
Post a Comment