அண்மைய செய்திகள்

recent
-

பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் பவேரியாவின் மிகப்பெரிய பயிர்வட்டம்

ஜேர்மனியின் பவேரியாவில் ஒருவரின் வயல்வெளியில் மிகப்பெரிய பயிர் வட்டம் ஒன்று அமைந்துள்ளதை மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து செல்கின்றனர். பவேரியாவில் க்றிஸ்டோப் ஹட்னர் என்பவரின் வயல்வெளியில், 75 மீட்டர் விட்டத்தில் மூன்று வளையங்களால் உருவாகியுள்ள இந்த பயிர் வட்டத்தினை கடந்த வாரம் வானில் பலூன் மூலம் பறந்தவர்கள் பார்த்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். 

 இணையத்தில் இந்த தகவல் காட்டுத் தீப்போல பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் அதனை நேரில் காண படையெடுத்தவாறு உள்ளனர். 1969ம் ஆண்டு நிலவில் முதலில் தடம் பதித்ததை ஐரோப்பாவில் ஒளிபரப்ப பயன்படுத்திய முன்னாள் தகவல் தொடர்பு நிலையத்தின் ஆண்டெனாக்களின் அருகே இந்த பயிர் வட்டம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை பார்க்க வருகைதரும் பல பார்வையாளர்கள், இது மனிதனால் உருவாக்கப்பட சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளனர். 

 பார்வையாளர்கள் பற்றி அந்த பகுதி பெண் ஒருவர் கூறுகையில், இந்த பகுதிக்கு புதிதாக வரும் அவர்கள் அந்த வயலில் பாடி, ஆடி மகிழ்வதோடு அங்கேயே படுத்து உறங்குகிறார்கள் என தெரிவித்துள்ளார். வயலின் சொந்தகாரரான க்றிஸ்டோப் ஹட்னர் இதுபற்றி கூறுகையில், இந்த பயிர் வட்டங்களை நான் உருவாக்கவில்லை.

 இது செய்வதற்கு மிகவும் கடினமானது, ஆனால் மிக அருமையாக செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பயிர் வட்டம் உருவானதால் பயிர்கள் சேதமடைந்ததுடன் எனக்கு பல நூறு யூரோக்கள் செலவு வைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்




பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் பவேரியாவின் மிகப்பெரிய பயிர்வட்டம் Reviewed by NEWMANNAR on July 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.