இங்கிலாந்து வீடொன்றினுள் 8 அங்குல நீளமான அசுர தும்பி
இங்கிலாந்திலுள்ள வீடொன்றினுள் 8 அங்குலம் நீளமான ஜூராசிக் அளவிலான அசுர தும்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரும்பச்சை நிறத்திலான இந்தத் தும்பியானது சிறிய வகை ஹெலிகொப்டர் போன்று, பயங்கர சத்தத்துடன் குறித்த வீட்டின் அறையொன்றினுள் சுற்றித் திரிந்ததாக அவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அசுர அளவிலான தும்பியைக் கண்ட திருமதி வில்கின்சன், சத்தம்போட்டு அருகிலிருப்போரை அழைத்துள்ளார். அத்துடன், ஒரு சில புகைப்படங்களையும் அவர் எடுத்துள்ளார்.
அதன் பின்னர், வீட்டின் ஜன்னல் ஒன்றினைத் திறந்து தும்பியை வௌியேற்றியுள்ளார்.
ட்ராகன் ப்ளைஸ் எனப்படும் இந்த அசுர வகை தும்பி இனமானது புவியில் 325 மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் நீர் மாசுபாடு ஆகிய காரணங்களால் இந்த இனம் காலப்போக்கில் அழிவடைந்து வருகிறது.
இங்கிலாந்து வீடொன்றினுள் 8 அங்குல நீளமான அசுர தும்பி
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:


No comments:
Post a Comment