முதல் பார்வையிலே காதல்: சமந்தா ருசிகரம்
முதல் பார்வையிலே காதலில் விழுந்தேன் என்றார் சமந்தா. அவர் யாரோ நடிகர் மீது கொண்ட காதல் பற்றி இப்போது சொல்லவில்லை. வேறு எதைச் சொல்கிறார் என்கிறீர்களா. இதோ அவரே சொல்கிறார். சமீபத்தில் ஷூட்டிங்கிற்காக காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது கறுப்பு நிற நாய் ஒன்று என் காரையே ஏக்கத்துடன் பார்த்தது.
அதை பார்த்தவுடன் உடனே அதன் மீது காதல் பிறந்துவிட்டது. உடனடியாக காரை நிறுத்திவிட்டு அதன் அருகே சென்றேன். என்னைப் பார்த்ததும் வாலை குழைத்தபடி நெருங்கி வந்தது. என்னை மிகவும் கவர்ந்தது. உடனே கையோடு அள்ளி காரில் போட்டுக்கொண்டு வீட்டுக்கொண்டு கொண்டு சென்றுவிட்டேன். அதற்கு ‘நோரி எனப் பெயரிட்டிருக்கிறேன்.
அதை அன்புடன் பாராமரித்துக்கொள்ள என் குடும்பத்தினரும் சம்மதித்ததற்கு அவர்களுக்கு நன்றி என்றார்.இதே பாணியில் திரிஷா, ஹன்சிகா ஆகியோரும் சமீபத்தில் தெருவில் திரிந்த நாய்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகின்றனர்.
முதல் பார்வையிலே காதல்: சமந்தா ருசிகரம்
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:


No comments:
Post a Comment