அண்மைய செய்திகள்

recent
-

பெறுமதி மிக்க வைரங்கள்

வைரங்கள் அதிக பளபளப்பு கொண்டவை, அதேபோன்று விலையும் அதிகம். பட்டை தீட்டப்படாத வைரம் மிகவும் கடினமானது. இயற்கையான வைரம் உருவாவதற்கு அதிக வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது. பூமியில் மிகச்சில வைரச்சுரங்கங்களே உள்ளன. உலகில் உள்ள வைரங்களில் 90 சதவீதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது. 
 மற்ற எல்லா ரத்தினங்களை விடவும் வைரத்தின் படிகக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கார்பன் அணுக்களின் கட்டமைப்பே அதனை மிகக் கடினமாக மாற்றியுள்ளது. இது எண்முக வடிவம் அல்லது ஆறு சதுர பக்கங்களைக் கொண்டிருக்கும். 

 திரவத்தில் கரையாது, கொழுப்பில் ஒட்டும், வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது போன்ற பண்புகள் வைரத்துக்கு உண்டு. தூய வைரம் தண்ணீரில் மிதக்கும். மேலும் ஒளி விலகல் மற்றும் ஒளிபுகும் திறன் ஆகிய இரண்டும் வைரத்துக்கு உண்டு. 

பென்சில், நிலக்கரி மற்றும் வைரம் ஆகிய மூன்றும் கார்பன் அணுக்களால் ஆனவை. வைரங்களின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளால் அது மற்ற ரத்தினங்களில் இருந்து வேறுபடுகிறது. பொதுவாக வைரங்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும், சில சமயங்களில் ஊதா, வெளிர் சிவப்பு, சிவப்பு, பச்சை மற்றும் அடர் சாம்பல் நிறங்களில் கூட கிடைக்கின்றன. ஊதா நிற வைரம் அதிக விலை கொண்டது. ஏனெனில் இந்தநிற வைரங்கள் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது.



பெறுமதி மிக்க வைரங்கள் Reviewed by NEWMANNAR on August 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.