தலைமுறை இடைவெளி
பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது, அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல என்றாலும், அவர்களின் பசி, தூக்கம் என்பவற்றைக் கவனித்து விட்டால் தொந்தரவின்றி விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர வளரத்தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்று பெற்றோரும், பெற்றோர் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று பிள்ளைகளும் புலம்புகிறார்கள்.
கரு முதல் இறுதி வரை கூடவே இருக்கும் ஒரே உறவு, இந்தப் பெற்றோர் – பிள்ளை உறவுதானே? அதை பலப்படுத்தும் முயற்சி மிகவும் அவசியம் அல்லவா!
* தலைமுறை இடைவெளி என்பது என்ன?
புரிந்துகொள்ளுதலில் இடைவெளி என்பது பெற்றோர் பிள்ளைகள் இடையே மட்டும்தான் வருகிறதா? இடைவெளியைக் குறைத்து இந்த உறவுக்குப் பாலம் அமைப்பது எப்படி?
தலைமுறை இடைவெளி என்பது, கருத்துப் பரிமாற்றத்திலும் புரிந்துகொள்ளுதலிலும் இருக்கக் கூடிய இடைவெளி. அது பொதுவாக, இளையவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இடையே இருப்பதாகக் கருதப்படுகிறது. எண்ணப்போக்கிலும் இலட்சியங்களை நோக்கிச் செல்வதிலும் இந்த இடைவெளி தோன்றுகிறது.
இந்த இடைவெளியை அதிகப்படுத்துவதில் பெரியவர், சிறியவர் என்ற இரு பக்கத்தினருக்குமே பங்கிருக்கிறது. ஆர்வம், சாதிக்கும் வெறி, துணிச்சல் எல்லாம் இளம் தலைமுறையினருக்கு அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை.
அதே நேரத்தில், அனுபவமும் ஞானமும் பெரியவர்களுக்கு அதிகம் என்பதையும் மறுக்க முடியாது. ஆக, வெவ்வேறு பலங்கள் கொண்ட இரு சாராருமே இணைந்து செயற்பட்டால் அதிக நன்மை உண்டு.
இருவருமே ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு, நல்லவற்றை மற்றவர்களிடமிருந்து கிரகித்துக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும். விரிசலுக்குக் காரணம் சொல்லாமல், பாலம் அமைக்க வழிகள் கண்டுபிடிப்பது தான் சரியான வழி.
தலைமுறை இடைவெளி
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:


No comments:
Post a Comment