அண்மைய செய்திகள்

recent
-

இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பலி

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் 11 வயது சிறுவனை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொன்றமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்த சம்பவத்தை குறித்த சிறுவனின் உறவினர்களும், வைத்தியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 

 கலீல் மொஹமட் அல்-அனாதி (Khalil Mohammed al-Anati) என்ற சிறுவன் வெஸ்ட் பேங்க்கில் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஹீப்ரான் நகரில் உள்ள அகதி முகாம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். 

 ”கலீல் வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டது. வந்து பார்த்தால் கலீல் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்” என கலீலின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பலி Reviewed by NEWMANNAR on August 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.