இன்று முதல் அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை
அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது.
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன இம்மாதம் நடைபெறவுள்ளன.
2014 ஆம் ஆண்டிற்காக உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதலாவது கட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் 15 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் பொருட்டு மேலும் 14 பாடசாலைகளின் சில வகுப்பறைகளை மாத்திரம் மூடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விடைத்தாள் மதிப்பீட்டிற்காக முழுமையாக மூடப்படும் 15 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளன.
இன்று முதல் அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை
Reviewed by NEWMANNAR
on
August 01, 2014
Rating:

No comments:
Post a Comment