மேயராக தெரிவு செய்யப்பட்ட நாய்.!!
அமெரிக்காவில் நடைபெற்ற மேயர் தேர்தலில் நாய் ஒன்று வெற்றிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மின்னேஸோரா மாநிலத்திலுள்ள கொர்மொரான்ட் நகரின் மேயராக 7 வயதான மீட் டியூக் என்ற நாய் இந்த வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நகரைச் சேர்ந்த 12 பேர் தமது வாக்குகளை செலுத்துவதற்கு தலா ஒரு டொலரை கட்டணமாக செலுத்தியுள்ளனர்.
மேயர் பதவிக்காக இந்த நாயுடன் போட்டியிட்ட மனித வேட்பாளரான ரிச்சர்ட் ஷெர்புறூக் இந்தத் தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ளார்.
இந்நிலையில் இந்த நாய் நாளை கொர் மொரான்ட் நகர மேயராக உத்தியோகபூர்வமாக பதவி ஏற்கவுள்ளது.
மேற்படி நாய்க்கு மேயர் பதவிக்கான ஊதியமாக உள்ளூர் மிருக உணவு விற்பனை நிலையமொன்று ஒரு வருடத்துக்கான நாய்களுக்கான உணவை வழங்கியுள்ளது.
மேயராக தெரிவு செய்யப்பட்ட நாய்.!!
Reviewed by NEWMANNAR
on
August 17, 2014
Rating:

No comments:
Post a Comment