மடு திருவிழாவினை முன்னிட்டு சுற்றுலா நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது
மன்னார் மடு மாதா திருவிழாவினை முன்னிட்டு, சுற்றுலா நீதிமன்றம் மடுவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், பொலிஸார், விலைக் கட்டுப்பாட்டு சபை, சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரின் வசதி கருதியும் இந்த நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மடுத்திருத்தல பரிபாலகரின் வழிகாட்டலின்பேரில் இந்த சுற்றுலா நீதிமன்றம் புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் திறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மடு திருத்தல திருவிழாவை முன்னிட்டு இந்த நீதிமன்றம் எதிர்வரும் 15ஆம் திகதிவரை இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மடு திருவிழாவினை முன்னிட்டு சுற்றுலா நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:


No comments:
Post a Comment