அணிலை எட்டி உதைத்தவர் பற்றிய தகவலை வழங்குவோருக்கு 17,000 டொலர் பரிசு
அமெரிக்க தேசிய பூங்காவில் ஒருவர் அணிலை எட்டி உதைத்து தள்ளுவது போன்ற கொடூர காட்சி இணைய தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அந்த நபரை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 17 ஆயிரம் டொலர்கள் (சுமார் 22,10,000 ரூபா) பரிசு வழங்கப்படும் என்று விலங்குகள் நல அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கிராண்ட் பள்ளத் தாக்கு தேசிய பூங்கா உள்ளது.
இங்குள்ள மலை முகட்டில் மேல் சட்டையின்றி காணப்படும் ஒரு நபர், அணில் ஒன்றை அருகில் வரவழைப்பதும் பின்னர் அந்த அணிலை பள்ளத்தில் எட்டி உதைத்து தள்ளுவது போன்ற காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகின.
அந்த நபரை கைது செய்ய உதவிடும் வகையில் அவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ‘People for the Ethical Treatment of Animals’ என்ற அமைப்பின் பிரிட்டன் கிளை 17 ஆயிரம் டொலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தேசிய பூங்கா சார்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பூங்காவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், எந்த இடத்தில் எப்போது இந்த சம்பவம் நடந்தது என்ற விவரம் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. அந்த நபர் பிடிபட்டால் அவர் மீது வனவிலங்குகள் சித்திரவதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அணிலை எட்டி உதைத்தவர் பற்றிய தகவலை வழங்குவோருக்கு 17,000 டொலர் பரிசு
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:


No comments:
Post a Comment