இன்றும் மன்னாரில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியங்கள் மடு பிரதேச செயலகத்தில் பதிவு
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மன்னார் மாவட்டத்தில் நான்காகவது நாளாகவும் இன்று தமது அமர்வை நடத்தவுள்ளது.
ஆணைக்குழுவின் இன்றைய அமர்வு மடு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாந்தை மேற்கு மற்றும் மன்னார் பிரதேச செயலகங்களில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற அமர்வுகளின்போது 120 க்கும் மேற்பட்டவர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர்.
அத்தோடு பலர் புதிதாக முறைப்பாடுகளையும் சமர்பித்துள்ளதாக காணாமற்போனொர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாஸ தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கனவே கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அமர்வுகளை நடத்தியிருந்தது.
இன்றும் மன்னாரில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியங்கள் மடு பிரதேச செயலகத்தில் பதிவு
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:

No comments:
Post a Comment