நாலரை இலட்சம் ரூபாய் மதிப்புடைய ஹெரோயின் வைத்திருந்த முஸ்லீம் நபர் ஒருவர் ஏறாவூரில் கைது
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரவேலியார் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமார் நாலரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றபட்டதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜேவிக்ரம தெரிவித்தார்.
சைக்கிள் ஒன்றில் சொப்பிங் பையில் இந்த ஹெரோயினை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது போதைப் பொருள் வியாபாரியுடன் சேர்த்து ஹெரோயினையும் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.
22 கிராம் நிறையுடைய இந்த ஹெரோயின் நாலரை இலட்ச ரூபாய் மதிப்புடையது என்று கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் வியாபாரியின் தகவல் மூலம் தெரிய வந்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
ஏறாவூரைச் சேர்ந்த சாஹுல் ஹமீட் என்பவரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. போலிஸ் உத்தியோகத்தர்களான ஏ. மகேந்திரராசா 44412, ஏ.எம். அத்தபத்து 49905, ஆர்.எம். மதுரங்க 40888, ஏ.பி.ஆர். சம்பிக்க 67378 ஆகியோரடங்கிய பொலிஸ் குழுவினர் இந்த ஹெரோயினைக் கைப்பற்றினர்.
நாலரை இலட்சம் ரூபாய் மதிப்புடைய ஹெரோயின் வைத்திருந்த முஸ்லீம் நபர் ஒருவர் ஏறாவூரில் கைது
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:

No comments:
Post a Comment