அண்மைய செய்திகள்

recent
-

உயிரிழந்த ஒருவரின் நகைகளை திருடிய வெளிவிவகார அமைச்சு தபால் பிரிவு ஊழியர் கைது

தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையரின் தங்க நகையை கொள்ளையிட்டதாக கூறப்படும் வெளிவிவகார அமைச்சின் தபால் பிரிவு ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நகையின் ஒரு பகுதி செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடையொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார். 

 உயிரிழந்தவருக்குச் சொந்தமான நகை உள்ளிட்ட பொருட்கள் தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக நாட்டிற்கு பொதியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்த நகை காணாமற்போயிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 இந்த நிலையில், காணாமற்போன நகையின் ஒரு பகுதி, நகைக் கடையிலிருந்து கைப்பற்றப்பட்டதுடன், அதனை கொள்ளையிட்டதாக கூறப்படும் வெளிவிவகார அமைச்சின் தபால் பிரிவு ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நகையை விற்பனைசெய்து, பெற்றுக்கொண்ட ஒரு இலட்சத்து 70 ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
உயிரிழந்த ஒருவரின் நகைகளை திருடிய வெளிவிவகார அமைச்சு தபால் பிரிவு ஊழியர் கைது Reviewed by NEWMANNAR on August 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.