அண்மைய செய்திகள்

recent
-

மீனவக் குடும்பங்களுக்கு அரிசி நிவாரணம்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 294 ஏழை மீனவர்களுக்கு ‘வேல்ட் விஷன்’ அமைப்பினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிவாரண உதவியாக அரிசி வழங்கி வைக்கப்பட்டது. களுவங்கேணி நெடியாமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் நிவாரண உதவிகளை பயனாளிகளின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். 

 ‘வேல்ட் விஷன் அமைப்பின் ஏறாவூர்பற்று பிராந்திய அபிவிருத்தி திட்ட அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில்- 294 குடும்பங்களுக்கு 05 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய அரசி நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டது. வறுமை நிலையில் வாழும் – மீன்பிடியை ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டவர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நிவாரண உதவி வழங்கி வைக்கப்பட்டது.

 ‘வேல்ட் விஷன்’ அமைப்பின் திட்ட இணைப்பாளர் என். அமலன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதய ஸ்ரீதா-உதவி திட்டப் பணிப்பாளர் கே. கங்காதரன்- ‘வேல்ட் விஷன்’ ஏறாவூர்பற்று பிராந்திய அபிவிருத்தி திட்ட அமைப்பின் திட்ட முகாமையாளர் ஏ. ரவீந்திரன்- பொருளாதார உத்தியோகத்தர் எஸ். விக்னேஸ்வரன்- கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மீனவக் குடும்பங்களுக்கு அரிசி நிவாரணம் Reviewed by NEWMANNAR on August 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.