முதல் உதவியில் இருக்கும் அடிப்படை விஷயங்கள்!
முதலில், பாதிப்பு அடைந்தவர் உணர்வுடன் இருக்கிறாரா என அவரின் இரண்டு பக்கத் தோள்களின் மீதும் தட்டிப் பரிசோதிக்க வேண்டும்.
மற்றவர்களை உதவிக்கு அழையுங்கள்.
இதனால், பாதிப்பு அடைந்த நபரை உடனடியாகக் காப்பாற்றுவதுடன், உங்களுக்கு இருக்கும் மனப் பதட்டத்தையும் தணித்துக்கொள்ள முடியும்.
ஆம்புலன்ஸ்க்கு தொடர்புகொள்ளுங்கள்.
ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொருத்து முதல் உதவி செய்வதற்கு முயற்சியுங்கள்.
ஆம்புலன்ஸ் உதவி மிக விரைவாகக் கிடைக்கும் என்றால், அவர்கள் வரும் வரை காத்திருங்கள். நேரம் ஆகும் என்றால் அல்லது நிலைமை மோசம் அடைந்தால், அவருக்கு 'கேப்’ (CAB - C: CIRCULATION, A:AIRWAY, B:BREATHING) எனப்படும், அடிப்படை விஷயங்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
அவை, ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
இந்த மூன்று சோதனைகளும் அடிப்படையானவை. எந்த வகையான பாதிப்பாக இருந்தாலும் இந்த மூன்று சோதனைகளையும் செய்த பின்னரே, முதல் உதவி செய்ய வேண்டும்.
முதல் உதவியில் இருக்கும் அடிப்படை விஷயங்கள்!
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:


No comments:
Post a Comment