மக்களவை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பதில் கூறிய மத்திய அமைச்சர்
மக்களவை வரலாற்றில் முதல்முறையாக, தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழிலேயே பதில் அளித்தார் மத்திய வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன். பிரதமர் மோடி அரசில் பொன்.ராதாகிருஷ்ணனும், திருச்சியில் பிறந்து ஆந்திர மருமகளாக உள்ள நிர்மலா சீதாராமனும் அமைச்சர்களாக உள்ளனர்.
இந்நிலையில், மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், சீனாவில் தயாரிக்கப்படும் விலைகுறைவான பட்டாசுகள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு விற்கப்படுவதில், உள்ளூரில் உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழில் கேட்டார். இதைத் தொடர்ந்து, இந்த கேள்விக்கு தமிழிலில் பதில் அளிக்க அனுமதிக்கும்படி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி கோரினார். சபாநாயகர் அதை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து தமிழில் பேசிய நிர்மலா சீதாராமன், ஜெயலலிதா எழுதிய கடிதம் கிடைத்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மக்களவை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பதில் கூறிய மத்திய அமைச்சர்
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:

No comments:
Post a Comment