தலைமன்னார் பியரில் ஹஜ் பெருநாள் சைக்கிள் ஓட்ட நிகழ்வு. தலைமன்னார் பியர் கிழக்கு முதலிடம்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு தலைமன்னார் பியர் புதிய குடியேற்றமாகிய றிசாட் சிட்டியில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் சைக்கிள் ஓட்ட நிகழ்வு ஆரம்பமானது. இதில் தலைமன்னார் பியர் கிழக்கைச் சேர்ந்த 52 வயதான பிரதர் என அழைக்கப்படும் கந்தப்பு கருணேந்திரன் என்பவர் முதல் இடத்தை பெற்றுக்கொண்டார்.
தலைமன்னார் பியர் றிசாட் சிட்டியில் இருந்து ஆரம்பமாகிய இந்த நிகழ்வு பேசலை பேருந்து தரிப்பிடம் வரை சென்று திரும்பி மீண்டும் தலைமன்னார் பியர் றிசாட் சிட்டிக்கு வருவதாக அமைந்திருந்தது. முதலாவதாக வந்த போட்டியாளருக்கும் இரண்டாவதாக வந்த போட்டியாளருக்கும் இடையில் சுமார் 2 கிலோ மீட்டர்கள் இடைவெளி நிலவியது பார்வையாளர்களின் ஆர்வத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
வெற்றி பெற்ற இவருக்கு தலைமன்னார் பியர் கிராம அலுவலர் ஜனாப். அப்துல் ரவூப் அவர்களோடு ஹஜ் பெருநாள் விழா தலைவர், விளையாட்டு தலைவர் உட்பட ஊர் பொது மக்கள் அனைவரும் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர். வெற்றியைத் தொடர்ந்து நாளை நடைபெறும் பரிசளிப்பு வைபவத்தில் முதலாம் பரிசாக சைக்கிள் ஒன்று வழங்கப்படும் என்பதை விழா தலைவர் கூறியுள்ளார்.
தலைமன்னார் பியரில் ஹஜ் பெருநாள் சைக்கிள் ஓட்ட நிகழ்வு. தலைமன்னார் பியர் கிழக்கு முதலிடம்.
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:




No comments:
Post a Comment