அண்மைய செய்திகள்

recent
-

உலக குடியிருப்பு தினம் இன்று

ஐக்கிய நாடுகளின் குடியிருப்பு ஆணையகத்தின் பிரகடனத்தின் பிரகாரம் 1986 ஆம் ஆண்டிலிருந்து வரும் ஒவ்வொரு ஒக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமையும் சர்வதேச குடியிருப்பு தினமாக நினைவு கூரப்படுகின்றது.

நாட்டில் சுமார் 1,30,000 ஆயிரம் சேரி வீடுகளில் மக்கள் வாழ்ந்துவருவதாக பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்க தெரிவிக்கின்றார்.

தெற்காசியாவில் குறைந்தளவான சேரி வீடுகளும், அதிகளவான நிரந்தர வீடுகளும் உள்ள நாடாக இலங்கை விளங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய சுமார் ஏழு இலட்சம் வசதி குறைந்த வீடுகள் நாட்டில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

சேரி வீடுகள் மற்றும் குறைந்தளவு வசதிகள் உள்ள வீடுகளில் வாழும் மக்களை இலக்காக கொண்டு வீடமைப்புத் திட்டங்களை செயற்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய வீடமைப்பு கொள்கை பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியுடன் பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சினால் தேசிய வீடமைப்பு கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று காலை நடைபெறவுள்ள வைபவத்தின் போதே தேசிய வீடமைப்பு கொள்ளை வெளியிடப்படவுள்ளது.
உலக குடியிருப்பு தினம் இன்று Reviewed by NEWMANNAR on October 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.