அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சுமார் 60 வருடங்கள் பழைமை வாய்ந்த சிதைவடைந்த நீர்த்தாங்கியை அகற்றும் பணி ஆரம்பம்.-Photos

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சுமார் 60 வருடங்கள் பழைமை வாய்ந்த சிதைவடைந்த நிலையில் காணப்படும் அதியுயர் நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவது தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி புதன் கிழமை மன்னார் நகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர் மெரினஸ் பெரேரா,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள்,இலங்கை மின்சார சபை அதிகாரிகள்,அரச,தனியார் கோக்குவரத்துச் சங்க அதிகாரிகள்,வீதி போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மன்னார் நகர சபையுடன் இணைந்து ஒப்பந்த காரர்களை நியமித்து குறித்த நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பணி ஒப்பந்தகாரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பணி சுமார் ஒரு மாத காலத்தினுள் முடிவடையவுள்ளது.தற்போது மழை பெய்து வருகின்றமையினால் நீர்த்தாங்கி உடைக்கும் பணிகள் மந்த கதியில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சுமார் 60 வருடங்கள் பழைமை வாய்ந்த சிதைவடைந்த நீர்த்தாங்கியை அகற்றும் பணி ஆரம்பம்.-Photos Reviewed by NEWMANNAR on November 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.