எங்களுக்கும் வீதி வேண்டும்-எமில்நகர் மக்கள் - Photo
மன்னார் மாவட்டத்தின் பிரதான கிராமங்களில் ஒன்றானா எமில்நகர் (எழில்நகர்) என்றுஅழைக்கப்படுகின்றது. இக் கிராமத்தில் நாம் குடியேறிய காலப் பகுதியில் இருந்து 1997-2014 இன்றுவரை எமில்நகர் முதலாம் ஒழுஙகை எவ்விதமான புனரமைப்பும் செய்யப்படவில்லை. கோடை காலத்தில் பரவாயில்லை. குண்டும்
குழியுமாக இருந்தாலும் பயணம் செய்யக் கூடியதாக இருக்கும்.
மாரிகாலம் மழை வெள்ளம் சில நிமிடம் பெய்யும் மழையினால் இக்குண்டும் குழியும் நிறைந்துகாணப்படும்.
இவ் முதலாம் ஒழுங்கை தொடங்கும் பகுதியிலே ஒரு பெரிய குளமும் பாதை முடிவிடத்திலும் ஒரு சிறியகுளமும் இருப்பதால் இவ் வீதி மாரி காலத்தில் “வெள்ள வீதி” தான் மன்னார் பொது வைத்தியசாலையின்அருகிலே இருப்பதால் பெரிய வாகனங்களும் இதனால் தான் செல்கின்றது. பிரதான வீதியாகவும் இது உள்ளது.
இப் பிரதான 1ம் வீதியில் 30 மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பாடசாலை மாணவ மாணவிகள் அரசஅரசசார்பற்ற ஊழியர்கள் பெண்கள் என பலரும் இப் பிரதான வீதி பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தைஎதிர்நோக்க வேணடியுள்ளது. குறிப்பாக மாணவர்கள் தங்களின் பாதணிகளை களற்றி கையிலே கொண்டு செல்லக் கூடியஅவல நிலை காண முடியும்.
கிராம மக்கள் ஒன்றாக இணைந்து பலமுறை மாநகர சபையினரிடம் பிரதேச சபையினரிடம் சென்றுமுறையிட்டும் கையெழுத்துப் பிரதிகளை வழங்கியும் எந்தப் பலனும் இல்லை.
இப்பிரதான வீதி மக்கள் படும் துன்பம்சொல்லில் முடியாது..
தேர்தல் காலங்களில் அது மாநகர சபை தேர்தலாகட்டும், ஜனாதிபதி தேர்தலாகட்டும், பாராளுமன்ற தேர்தல்ஆகட்டும், வீதி தேடி வருகின்ற வேட்பாளர்கள் அனைவரிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்வது எங்களுக்கு இந்த பிரதானவீதியை செப்பணிட்டு தருமாறு ஆம் ஆம் என தலையாட்டி தேர்தல் முடிந்த பின்பு தேடுவாரற்றுக் கிடக்கும் சுவரொட்டி
போல எம் மக்கள் நிலைமை….
பிரதான வீதி எனக் குறிப்பிடக்காரணம் மன்னார் பொது வைத்தியசாலையோடு 1வது பிரதான வீதியாக 1ம் விதி காணப்படுகின்றது. எமில்நகர் 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் என வீதிகளில் எமது 1ம் பிரதான வீதிமட்டுமே .கொங்கிறீற்றினால் செப்பனிடப்படவில்லை. மற்றைய 4 வீதிகளும் கொங்கிறீர் கலவையினால்செப்பணிடப்பட்டுள்ளது. ஏன் எமது முதலாவது பிரதான வீதி மட்டும் செப்பணிடப்படவில்லை என்பதற்கு என்ன காரணம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
இப் பிரதான வீதியில் வசிக்கும் மக்களின் குறிப்பாக சின்னஞ்சிறிய பாடசாலை மாணவர்களின் நிலையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை சம்மந்தப்பட்டவர்கள் மிக விரைவில் நல்லதொரு முடிவை அதுவும் “கொங்கிறீற்பாதையாக” செப்பணிட்டு தருவீர்கள் என்னும் நம்பிக்கையில் எமது மனக்குமுறலை
வெளியிடுகின்றோம்.
எமில்நகர்
1ம் பிரதான வீதி கிராம வாசி,
வை.கஜேந்தின்.
எங்களுக்கும் வீதி வேண்டும்-எமில்நகர் மக்கள் - Photo
Reviewed by NEWMANNAR
on
November 05, 2014
Rating:

No comments:
Post a Comment