அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு-Photos


ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இன்று (6)சனிக்கிழமை காலை மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாருக்கு வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள தலைமன்னார்,மன்னார்,விடத்தல்தீவு,இலுப்பைக்கடவை,மடு,முருங்கன்,சிலாபத்துறை  ஆகிய 7 பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் 31 பொலிஸாருக்கு குறித்த மோட்டார் சைக்கில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலையத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அலகக்கோன்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ரி.சுகதபால ஆகியோர் இணைந்து குறித்த மோட்டார் சைக்கில்களை வழங்கி வைத்தனர்.

இதன் போது குறித்த நிகழ்வில் 7 பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
















மன்னார் பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு-Photos Reviewed by NEWMANNAR on December 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.