காணாமற்போனோர் தொடர்பில் மூன்றாவது நாளாகவும் விசாரணை; 60 பேருக்கு அழைப்பு
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளன.
இன்றைய அமர்வில் சாட்சியமளிப்பதற்காக 60 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் நேற்று நடைபெற்ற அமர்வில், 47 பேர் சாட்சியமளித்திருந்ததுடன், புதிதாக 51 முறைப்பாடுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜப்பான் நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நீதிபதியான மோட்டோ நொகுச்சி ஆறாவது வெளிநாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணமகவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பில் மூன்றாவது நாளாகவும் விசாரணை; 60 பேருக்கு அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 16, 2014
Rating:

No comments:
Post a Comment